Monday, June 20, 2011
Monday, August 2, 2010
கதை படிக்க வாருங்கள்- பாகம் இரண்டு
காக்கா ஏன் கறுப்பாச்சு?
ரொம்ப காலத்துக்கு முன்னாடி காக்கா வெள்ளையா இருந்துச்சுசாம். வெள்ளைன்னா அப்படி ஒரு வெள்ளை. அப்ப எல்லாம் காக்கா ரொம்ப தூரம் பறக்குமாம். சூரியன் வரைக்கும் பறந்து போகுமாம்.அப்படி இருந்த காக்கா எப்படி கருப்பாச்சு? ஊங் குட்டுங்க செல்றேன்..
சூரியபூர் நாட்டோட ராஜாவுக்கு ரொம்ப வருஷம் கழிச்சு அழகான இளவரசி பிறந்தாங்கலாம். கொள்ளை அழகு. குழந்தையில இருந்து வீட்டை விட்டே வெளிய வரலையாம்.நல்ல பெரியவங்களாகி கல்யாண வயசுல வெளிய விளையாட வந்தாங்கலாம். அவங்க பேரு அங்கிகா. அவங்க விளையாடறத பாத்த சூரியனுக்கு அவங்களை ரொம்ப பிடிச்சு போச்சாம். இளவரசிக்கும் சூரியனை பிடிச்சிடுச்சாம். தினமும் விடியற்காலையில எழுந்ததில இருந்து சூரியன் கிட்ட தான் பேசிட்டு இருப்பாங்கலாம். சூரியனும் பூமிய சுத்திக்கிட்டே இளவரசிகிட்ட பேசிட்டு இருந்ததாம். ரொம்ப நல்ல நண்பர்களா மாறிட்டாங்க. ஒரு நாள் சூரியன் இந்த இளவரசிக்கு பரிசு கொடுக்க நினைச்சுதாம்.
சூரியன் கிட்ட வரைக்கும் காக்கா பறந்துச்சு இல்லையா? அதனால சூரியன் ஒரு காக்காவ கூப்பிட்டு பையில சந்தனம்,வாசனை திரவியங்கள், முத்து மாலை எல்லாம் கொடுத்து இளவரசிகிட்ட கொடுத்துடுன்னு சொல்லிட்டு மறஞ்சி போச்சாம். சாய்ந்திரம் ஆகிடுச்சுன்னா சூரியன் தூங்க போயிடும் இல்லையா? காக்கா அந்த பைய தூக்கிகிட்டு இளவரசி இருந்த அரண்மனைய நோக்கி பறந்து போயிட்டு இருந்துச்சாம்.
வழியில திருமண ஊர்வலம் போயிட்டு இருந்திருக்கு. நிறைய பழங்கள்,உணவுப்பொருட்கள் எடுத்துட்டு போனாங்க போல.காக்காவுக்கு கொஞ்ச உணவாச்சும் கிடைக்குமேன்னு ஆசை. அரண்மனைக்கு போயிட்டு வந்தா தாமதமாகி போகும். சரின்னு அந்த பைய ஒரு மரத்தில மாட்டிட்டு திருமண ஊர்வலத்துக்கு போச்சாம். மரத்துக்கு கீழ இருந்த ஒருத்தன் இந்த காக்கா பைய வெச்சுட்டு போனதை பாத்துகிட்டே இருந்தானாம். நல்ல வாசனை வந்தது. அதனால மரத்தில ஏறி பைய திறந்து பாத்து இருக்கான். பைக்கு உள்ள சூரியன் கொடுத்து அனுப்பின எல்லா பொருளையும் பாத்து சொக்கி போயிட்டானாம்.உடனே எல்லாத்தையும் எடுத்துகிட்டு மரத்தில இருந்த குப்பை எல்லாம் பையில எடுத்து போட்டுட்டு கிளம்பிட்டான்.
காக்கா நல்லா சாப்பிட்டு வந்துச்சாம். பைய எடுத்துகிட்டு இளவரசி அரண்மனைக்கு போயிடுச்சாம்.அங்க இளவரசிகிட்ட சூரியன் கொடுத்த பைய கொடுத்துச்சாம். திறந்து பார்த்த இளவரசிக்கு அதிர்ச்சி. ச்ச..இந்த சூரியன் ஏன் இப்படி பண்ணிடுச்சு. என் மேல அன்பே இல்ல. எல்லாம் நடிப்பு. அவன் பேச்சு இனிமேல் டூன்னு சொல்லிட்டு பைய விசிரியடிச்சிடுச்சாம்.
மறுநாள் காலை,சந்தோஷமா இளவரசிய பார்க்கலாம்ன்னு வந்த சூரியனுக்கு தூக்கி வாரி போட்டுச்சாம். அந்த பை கீழ விழுந்திருந்தத பாத்தே ஏதோ தப்பு நடந்திருக்குதுன்னு புரிஞ்சிடுச்சாம்.பயங்கர கோபம் வந்துடுச்சாம். காக்காவை பார்த்து கோவமா பாத்த உடனே வெள்ளையா இருந்த காக்கா கறுப்பா மாறிடுச்சாம். அதனால தான் சூரியன் கிட்டகூட பறக்க முடியாம போச்சாம். கிட்ட இருந்த சூரியனும் பூமி மேல கோபம் வந்து தூரமா போயிடுச்சாம்.
இப்ப தெரிஞ்சதா காக்கா ஏன் காக்கா கறுப்பாச்சுன்னு?
ஐந்தாம் வகுப்பு மாணவர்கள்- தவணை மூன்று ( இணையம் வழி கற்றல் )
கதைப் படிக்க வாருங்கள்!
ஆப்பிள் அழகி
சுந்தரபுரம் என்ற நாட்டை அனந்தன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவனுக்கு ஐந்து மகன்கள். அவர்களுள் நான்கு பேருக்கு திருமணம் முடிந்தது. ஐந்தாவது இளவரசன் அறிவு, வீரம், அழகு எல்லாவற்றிலும் மிகவும் சிறந்து விளங்கினான். அதனால் அரசருக்கு அவன் மேல் விருப்பம் அதிகம். எங்கே அந்த மகனிடம் அரச பதவியை கொடுத்துவிடுவாரோ என பயந்தனர் மற்றவர்கள். இதனால் அவன் மீது பொறாமைக் கொண்ட அண்ணிகள், "ஆப்பிள் அழகி என்ற உலகிலேயே சிறந்த அழகி ஒருத்தி உண்டு. அவளை நீ மணந்து வா!'' என்று சொல்லி ஏத்தி விட்டனர்."அவள் எங்கே இருக்கிறாள்?'' என்று கேட்டான் இளவரசன். "அதான் யாருக்குமே தெரியாதே!'' என்றனர் அண்ணிகள். "நான் அவளை திருமணம் செய்துக் கொண்டு தான் இங்கே வருவேன்,'' என்று சொன்னான் இளவரசன். அண்ணிகளோ, "நீ அவளை திருமணம் செய்து கொண்டு வந்தால் நாங்கள் உனது அடிமைகள்!'' என்று கூறினர்.
அதைக் கேட்ட இளவரசன் தன் வாளுடன் காட்டை நோக்கி நடந்தான். அப்போதுதான் அவன் எப்படியாவது ஒழிந்து போவான்... என நினைத்தனர். அரசரும் "உலகிலேயே யாரும் அடைய முடியாத ஆப்பிள் அழகியை மணந்து வந்தால் இந்த நாட்டுக்கு நீதான் அரசன்,' என்றார். காரணம்! ஆப்பிள் அழகி சிரித்தாலோ வைரக் கற்கள் கொட்டும். அவற்றை கொண்டு நாட்டை செழிப்பாக்கி விடலாம் என நினைத்தார் அரசர்.
அண்ணிகளோ, "இளவரசனால் ஆப்பிள் அழகியை பார்க்கவே முடியாது. ஏனெனில், அவள் எங்கே இருக்கிறாள் என்று யாருக்குமே தெரியாது! இதோடு இவன் ஒழிந்தான்!' என்று நினைத்தனர். இளவரசன் காட்டின் நடுவில் சென்று கொண்டிருந்தான். அப்பொழுது களைப்பாக இருந்ததால் ஒரு மரத்தடியில் சென்று அமர்ந்தான். அந்த மரத்தில் ஒரு பருந்து கூடு கட்டி வைத்திருந்தது. அது முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும். அது இரை தேட செல்லும் பொழுது ஒரு நாகம் தினமும் அது இடும் முட்டைகளை குடித்துவிட்டுச் செல்லும். அன்று பருந்தின் குஞ்சுகள் நான்கை கொல்லப் போனது. குஞ்சுகள் கத்துவது இளவரசன் காதில் விழுந்தது; கோபம் வந்தது. உடனே குஞ்சுகளை கொல்வதற்கு தன் வாளுடன் மேலே பார்த்தான். அங்கே பாம்பு, குஞ்சுகளை கொல்லப் போவதைப் பார்த்தான். உடனே பாம்பை கொன்று குஞ்சுகளை காப்பாற்றினான். அதைப் பார்த்து பருந்துகளின் குஞ்சுகள் மிகுந்த சந்தோஷம் அடைந்தன.
"அண்ணே நீங்கள் யார்?'' என்று கேட்டன பருந்து குஞ்சுகள். இதைக் கேட்டதும் இளவரசன் அசந்துப் போனான். ஆப்பிள் அழகியை திருமணம் செய்யச் செல்வதாக கூறினான் இளவரசன். இதைக் கேட்ட பருந்து குஞ்சுகள், ""நாங்கள் உங்களுக்கு உதவி செய்ய முடியாது. எங்கள் அம்மா, அப்பாவால் தான் முடியும். நாங்கள் சொல்லி உதவி செய்கிறோம். நீங்கள் அந்த செடிகளில் ஒன்பதாவது செடியின் பின் சென்று ஒளிந்து கொள்ளுங்கள். நாங்கள் சொன்னால் மட்டுமே நீங்கள் வெளியே வர வேண்டும். எங்கள் அம்மா, அப்பாவிற்கு கோபம் வந்தால் உங்களையும் கொன்றுவிடுவர். அதனால்தான் சொல்லுகிறோம்,'' என்றன.
அதைக் கேட்ட இளவரசன் அவர்கள் சொன்ன இடத்திற்கு சென்று ஒளிந்துக் கொண்டான். பருந்துகள் கூட்டிற்கு வந்தன. தன் குஞ்சுகள் உயிரோடு இருப்பதையும், முட்டைகள் உடைந்து கிடப்பதையும், பாம்பு துண்டு, துண்டாக கிடப்பதையும் பார்த்து பருந்து இரண்டும் சந்தோஷத்துடன் தன் குஞ்சுகளிடம் கேட்டன.
உடனே ஒரு குஞ்சு நடந்ததை சொன்னது. ""அவன் எங்கே இருக்கிறான்?'' என்று கேட்டன.
"அம்மா நீங்கள் எங்களுக்கு பிராமிஸ் பண்ணுங்க. எங்கள் உயிரை காப்பாற்றியவருக்கு ஒரு உதவி செய்வோம் என வாக்குறுதி கொடுத்தால் நாங்கள் அவரை உங்களுக்கு காண்பிப்போம்,'' என்றன.
"சரி!'' என சொல்யதும். குஞ்சுகள் உடனே, ""அண்ணா இங்கே வாருங்கள்!'' என அழைத்தன. அதுவரை நடந்தவற்றை பொருமையாக பார்த்துக் கொண்டிருந்த இளவரசன் வெளியே வந்து பருந்துகளை வணங்கினான்.
"உனக்கு என்ன வேண்டும் சொல்!'' என்றன. உடனே இளவரசன் அரண்மனையில் நடந்தவற்றை கூறினான். உடனே கழுகுகள் அந்த ஆப்பிள் கன்னி ஏழு மலைகளைத் தாண்டிச் சென்றால் அழகிய தங்க ஆப்பிள் தோட்டம் வரும். அதன் நடுவில் ஒரு மரம் இருக்கும். அதில் இறக்கிவிடுவேன். அந்த மரத்தை மூன்று சுற்று சுற்ற வேண்டும். முதல் சுற்றில் ஒரு கனியை பார்க்க வேண்டும், இண்டாம் சுற்று சுற்றும் பொழுது ஒரு கனியை பார்க்க வேண்டும். மூன்றாம் சுற்று சுற்றும் பொழுது ஒரு கனியை பறிக்க வேண்டும். அந்தக் கனியை அரண்மனைக்கு எடுத்து சென்று பிய்த்து பார்த்தால் அதில் ஆப்பிள் கன்னி இருப்பாள்.
"அந்த ஆப்பிளை பறிக்கும் போது அந்த தோட்டத்தின் உரிமையாளன் கொம்பேரி பாம்பு முகத்தையுடைய பாம்பு ராட்சஷன் உன்னை கொத்த வருவான். நீ இந்த நாகக்கல்லை அவன் மீது தூக்கி எறிந்தவுடனே அவன் இறந்து போவான்,'' என்றது.
இதைக் கேட்ட இளவரசன் சரி என்றான். இளவரசன் அந்த மரத்தை பார்த்து விட்டு சுற்றத் தொடங்கினான். முதல் சுற்றில் ஒரு கனியை பார்த்தான். இரண்டாம் சுற்றில் பருந்து சொன்னது போல் பாம்பு முகத்தைக் கொண்ட ராட்சஷன் ஓடி வந்தான். நாகக்கல்லை அவன் மீது தூக்கி எறிந்தான். ராட்சஷன் "ஆ' என அலறியபடியே மடிந்து போனான். மூன்றாம் முறை மரத்தை சுற்றியதும் தங்க நிற ஆப்பிள் ஒன்று அவன் கையில் வந்து விழுந்தது. உடனே பருந்து அவனை தன் முதுகில் ஏற்றி வந்து அவனது நாட்டில் விட்டது.
மறுநாள் அரசனை வணங்கிய இளவரசன் அந்த தங்க ஆப்பிளை காண்பித்தான். அதன் அழகில் மயங்கினர். அதன் அழகில் மயங்கிய அண்ணிகள், "அது எனக்கு வேண்டும்!' என கெஞ்சினர். ஆனால், இளவரசனோ ஆப்பிளை இரண்டாகப் பிளந்தான். அதிலிருந்து தங்கச்சிலை போல் ஆப்பிள் அழகி வெளியே வந்தாள். அவள் அரசனை வணங்கி இளவரசனின் கரத்தைப் பிடித்தாள். அப்படியே அதிர்ந்தனர் அனைவரும். கலகலவென சிரித்தாள்.
வைரங்கள் கொட்டின, அசந்து போன அண்ணிகளும், அண்ணன்களும் தன் தம்பிக்கு கிடைத்த ஆப்பிள் அழகியை எண்ணி பொறாமைக் கொண்டனர். அரசன் தன் மகனுக்கு முடிசூட்டி ஆப்பிள் அழகியை அரசியாக்கி மகிழ்ந்தான். பிறகு இருவரும் சிறப்பாக நாட்டை ஆண்டனர்.

Monday, February 22, 2010
ஈராயிரத்து பத்தாம் ஆண்டின் படைப்புகள்
நூர் சைடா
தொடக்கநிலை 6ப
அன்று சூரியன் பிரகாசமாக காச்சியளிதான்.மாணவர்கள் எல்லாரும் தங்களின் வகுப்பில் அமர்ந்தார்கள் .சிறிது நேரம் பாடம் நடந்த பிறகு "ட்ரிங் !ட்ரிங்!"என்று இடைவேளை மணி ஒலித்தது .மாணவர்கள் எல்லாரும் வகுப்பின் வெளியே வரிசெயாக நின்றார்கள்.ராமுவின் வகுப்பு பள்ளி உணவகத்தை அடைந்தவுடன் எல்லாரும் மின்னல் வேகத்தில் ஓட ஆரம்பித்தார்கள் .ராமுவும் முத்துவும் சாப்பிடாமல் பள்ளி உணவகத்தை ஒரு திடலை போல் அதில் ஓடி பிடித்து விளையாடினார்கள்.அவர்கள் ஓடிக்கொண்டிருந்ததை வரிடம் ஆரம்பத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்த ஒரு பள்ளியின் மாணவர் தலைவிக்கு இது பொறுக்கவில்லை .
அவர் அவர்களை நிறுத்தி திட்டினால் .அவர்கள் அவரை அலட்சியபடுதிவிது தொடர்ந்து விளையாடினார்கள் .அவர்களின் முன்னால் ஒரு புதிய மாணவி தட்டை தூக்கிக்கொண்டு மெதுவாக நடந்துக்கொண்டிருந்தால் .புதிய மாணவியை கண்ட முத்து முன்னால் ஓடிக்கொண்டிருந்த ராமுவை எச்சரித்தான் .ஆனால்,அதற்க்கு முன்பே அவன் மாணவியின் மீது மோதிவிட்டான்.
இதை பார்த்த மாணவர் தலைவியை ஒரு சட்டம் பிள்ளையை கூபபிட்டு தலைமை ஆசிரியரை அழைக்க சொன்னார் .சூடான நீர் அந்த மாணவியின் மீதும் ராமுவின் மீதும் ஊற்றியதால் அவர்கள் அலறினார்கள் .தலைமை ஆசிரியர் முத்துவையும் ராமுவையும் பலமுறை கண்டித்திருக்கிறார் .இது கடைசி முறை என்று சொல்லிவிட்டு அவருடைய அலுவலகத்திற்க்கு சென்றார் .அந்த சம்பவத்திற்கு பிறகு எந்த மாணவர் தலைவன் அல்ல தலைவி சொல்வது எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டார்கள் .அந்த சம்பவம் அவர்களுக்கு ஒரு நல்ல பாடத்தை கற்று கொடுத்தது .

Wednesday, May 20, 2009
அனைத்துலக நண்பர்கள் தினம்
நேற்று நானும் என் நண்பர்களும் வகுப்பில் ஒரு விளையாட்டு விளையாடினோம். எனக்கு அந்த விளையாட்டு மிகவும் பிடித்திருந்தது. அது வேடிக்கையாக இருந்தது. எனக்கு இந்த விளையாட்டை மீண்டும் விளையாட வேண்டும் என்று ஆவலாக உள்ளது. பள்ளி இடை வேளையின்போது நான் என் சீன நண்பர்களுடன் விளையாடினேன்.
ஹரிணி 3E
நேற்று நான் என் தமிழ் ஆசிரியருடன் ஒரு வகையான ஜப்பானிய விளையாட்டு விளையாடினேன். அது மிகவும் சுவாரசியமாக இருந்தது. நானும் என் நண்பர்களும் வட்டமாக நின்று கொண்டோம். அதன் பிறகு ஒரு மாணவன் ஹையா! என்று ஒரு ஜப்பானிய வீரனைப்போல் கத்தினான். அவனுக்கு எதிரில் இருந்த இன்னொரு மாணவன் ஹையோ! என்று கையை உயர்த்தி கத்துவான். அவனுக்கு பக்கத்தில் இருக்கும் இரண்டு மாணவர்களும் தங்களின் கையை வைத்து தாக்குவதைப்போல் பாசாங்கு செய்ய வேண்டும். ஆனால் அதை அவர்கள் சீக்கிரமாக செய்ய வேண்டும். தமிழ் வகுப்பில் விளையாடிய விளையாட்டை நான் என் ஆங்கில வகுப்பிலும் விளையாடினேன். என் சீன நண்பர்களும் மலாய் நண்பர்களும் இந்த விளையாட்டை விளையாடினார்கள். எனக்கும் அவர்களுக்கும் மகிழ்ச்சியாக இருந்தது.
மாதேஷ் (3H)
இந்த விளையாட்டு எனக்கு மிகவும் பிடிக்கும். இப்போது இந்த விளையாட்டை எப்படி விளையாடுவது என்று எனக்குத் தெரியும். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. என் நண்பர்களும் இந்த விளையாட்டை விளையாடினார்கள்.
ஆயிஷா ஜெபிரின் (3F)
இந்த 'சமுராய்' விளையாட்டு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.என் ஆசிரியர் இந்த விளையாட்டை விளையாடிக் காட்டினார்.
ஹரிணி (3B)
நான் விளையாடிய விளையாட்டின் பெயர் 'சமுராய்'. இது ஒரு ஜப்பானிய விளையாட்டு என்று நான் நினைக்கிறேன். நானும் என் நண்பர்களும் மகிழ்ந்தோம்.
என் ஆசிரியர் என்னை தாக்கினார். நான் கத்தினேன். என் நண்பன் இரண்டு கைகளை
தூக்குவதற்குப் பதிலாக ஒரு கையை தூக்கினான். எல்லோரும் சிரித்தார்கள். இது
நட்பை வளர்க்கும் ஒரு நல்ல விளையாட்டு.
சரண் (3G)
எனக்கு இந்த விளையாட்டு மிகவும் பிடித்திருக்கிறது. எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. என் தோழர்களும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.இது நட்பை வளர்க்கும் ஒரு விளையாட்டு. மற்றவர்களை எப்படி சீக்கிரமாக சுட்டிக்காட்டுவது என்பதை இந்த விளையாட்டிலிருந்து கற்றுக்கொண்டேன்.
சங்கீதா(3B)
எனக்கு இந்த ஜப்பான் விளையாட்டு மிகவும் பிடித்துள்ளது. இதுவரை நான் இம்மாதிரியான விளையாட்டை விளையாடியதே இல்லை. இந்த விளையாட்டு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. நான் இன்று ஒரு புது விளையாட்டை கற்றுக்கொண்டேன்.
கமலி(3D)
எனக்கு இந்த சமுராய் விளையாட்டு மிகவும் பிடிக்கும்.இந்த விளையாட்டுக்கு கவனம் தேவை. நான் சங்கீதாவை தாக்கினேன். நான் மகிழ்ச்சி அடைந்தேன். நீங்களும் இந்த விளையாட்டை விளையாடலாமே!
த்ரிதாஷா ( 3H)
இன்று அனைத்துலக நண்பர்கள் தினம். நானும் எங்கள் ஆசிரியையும் இந்த விளையாட்டை தமிழ் வகுப்பில் விளையாடினோம். இந்த விளையாட்டு வேடிக்கையாக இருந்தது. என் வகுப்புத் தோழி ஆண்டாள் மிகச் சிறப்பாக விளையாடினாள்.
ஐஸ்வர்யா( 3C)
இந்த விளையாட்டு மிகவும் வேடிக்கையாக இருந்தது. என் நண்பர்களும் நானும் பல பிழைகள் செய்தோம். ஆனால் யாரும் கோபப்படவில்லை. எல்லோரும் சிரித்தோம். இந்த விளையாட்டின் உண்மையான பெயர் எனக்குத் தெரியாவிட்டாலும் இந்த விளையாட்டு விளையாடுவதற்கு வேடிக்கையாக இருந்தது.
ஸ்ரீ ஆண்டாள்( 3G)

Monday, May 18, 2009
ஜப்பான்

ஜப்பான் ஆசியக் கண்டத்தில் உள்ள பல தீவுகளைக் கொண்ட ஒரு அழகிய நாடு. இது பசிபிக் பெருங்கடலின் மேற்கு பகுதியில் உள்ளது. இது சூரியன் உதிக்கும் நாடு என்றும் அழைக்கப்படுகிறது. இதன் தலைநகரம் டோக்கியோ.
ஜப்பான் மொத்தம் 6800 தீவுகளை உள்ளடிக்கியது. ஹொக்கைடோ, ஹோன்ஷகு, கியுஷுகு ஆகியன ஜப்பானின் முக்கியமான தீவுகளாகும்.
விடுமுறை போது நான் அங்கு செல்ல பெரிதும் விரும்புகிறேன்.
ஜெயலக்ஷ்மி
4F
Subscribe to:
Posts (Atom)