Wednesday, September 17, 2008

என் பெற்றோர்.......


தெரியாத பாடத்தை கற்றுக் கொடுப்பார் என் தாய்,

நான் செய்யும் தவறுகளைக் கண்டிப்பார் என் தந்தை,

கேட்டதைத் தட்டாமல் கொடுப்பார்கள் இருவரும்,

இவர்களே என் அன்பு பெற்றோர்கள்!


அஷ்விந்தர்

5B

பட்டம் பார்!


பட்டம் ஆகாயத்தில் பறக்கும். அது பல வண்ணங்களில் இருக்கும். பட்டத்திற்கு அழகிய வாழ் உண்டு. கடற்கரையில் பட்டம் விடலாம். என்னுடைய அழகான பட்டம் பார்.


சுவேதா

1A

என்னைப் பற்றி .................

என் பெயர் ஷரேணி. எனக்கு ஆறு வயது ஆகிறது. எனக்கு ஒரு தம்பியும் ஒரு தங்கையும் இருக்கிறார்கள். நான் ஒன்றாம் வகுப்பில் படிக்கிறேன். நான் பள்ளி முடிந்ததும் விட்டிற்கு சென்று என் பாடங்களைச் செய்வேன். என் அம்மா எனக்கு சொல்லிக் கொடுப்பார். எனக்கு புத்தகங்கள் படிக்க பிடிக்கும். நான் என் தங்கையுடன் சிறிது நேரம் விளையாடுவேன். என் தங்கை என்னகு தமிழ் பாடம் சொல்லித் தருவார்.

ஷரேணி
1C

கதை கதையாம் காரணமாம்!!!!!!!


இந்த கதை உனக்கு பிடித்திருக்கிறதா?

- ஆமாம்! இந்த கதை மிகவும் வித்தியாசமாக இருந்தது. அது மட்டும் இல்லாமல் கதையின் முடிவு மிகவும் வேடிக்கையாக இருந்தது.


இந்த கதையில் உன்னைக் கவர்ந்தவர் யார்?

-இந்த கதையில் என்னை கவர்ந்தவர் சரவணன். அவன் முட்டாளாக இருந்ததால் அவனின் வார்த்தைகள் மிகவும் வேடிக்கையாக இருந்தது.


இந்த கதையில் நான் கற்ற மூன்று புதிய சொற்கள்:

- துரதிஷ்டவசமாக

-போதித்தார்

-அனுதாபம்


அன்புள்ள சரவணன்


நீ நலமாக இருக்கிறாயா? நான் நலமாக இருக்கிறேன். நான் உன் பிரச்சனைகளை அறிவேன். ஏன் அவர்கள் உன்னை அடித்திருப்பார்கள் என்று உனக்கு தெரியுமா? மற்றவர் மனைவியை உன் மனைவி என்று எப்படி உரிமையுடன் கூறி நீ அனுதாபம் தெரிவித்தாய்? அதனால் தான் உன்னை அடித்தார்கள். உன்னை மீண்டும் சந்திக்கிறேன்! சீக்கிமாக பதில் எழுது!


இப்படிக்கு,

லாவண்யா, ஸ்னேஹா

4G

ஆசிரியார்கள்


நல்ல நல்ல ஆசிரியார்கள்,

எங்கள் மீது அன்பு உள்ளவர்கள்,

பாடத்தோடு நல்லது சொல்லித் தருபவர்கள்,

எங்கள் கல்விக் கண்களைத் திறந்து வைப்பவர்கள், எங்களுக்காகப் பாடுப்படுபவர்கள்,

எங்கள் வெற்றிக்கு கை கொடுப்பவர்கள்,

இவர்கள் நல்ல ஆசிரியர்கள்!


கண்ணா

5F

என்னைப் பற்றி


எனக்கு மிகவும் பிடித்த பாடம் தமிழ். நான் தினமும் தமிழ் படிப்பேன். அதனால் ஏன் தமிழ் ஆர்வம் வளர்கிறது.


பாவாஸ்

1D

Tuesday, September 16, 2008

புதுக் கவிதை

திருவள்ளுவர் எழுதுயது திருக்குறள்
ஔவையார் எழுதியது ஆத்திசூடி
பாரதியார் எழுதியது கவிதை
கண்ணதாசன் எழுதியது பாடல்
கதாசிரியர் எழுதியது கதை
நான் எழுதுவது புதுக்கவிதை

வைத்தீஸ்வரி
5E

நாங்கள் படித்து விரும்பிய கதை.................


இந்த கதை உனக்கு பிடித்திருந்ததா?
ஆமாம்! ஏனென்றால் இந்த கதை நகைச்சுவையாக இருந்தது.

இந்த கதையில் உன்னை கவர்ந்தவர் யார்?
இந்த கதையில் எங்களைக் கவர்ந்தவர் பெரியவர். அவர் எல்லோரிடமும் அன்பு காட்டினார்.

இந்த கதையில் நீ கற்றுக் கொண்ட மூன்று சொற்கள்:
- அனுதாபம்
-துர்த்திஷ்தவசமாக
- சமீபித்துவிட்டு
நீ சரவணனுக்குக் கூற விரும்பும் அறிவுரை:

சரவணன்! நீ ஒன்றுமே தெரியாமல் இருக்கக் கூடாது. நீ என் விட்டுக்கு வா! நான் உனக்கு பொது அறிவு, மற்றவர்களிடம் எப்படி பேசுவது என்றெல்லாம் கற்றுக் கொடுக்கிறேன். நீ பேசும் போது சிந்தித்து பேச வேண்டும். அப்போது தான் மற்றவர்கள் உன்னை மதிப்பார்கள். சரி, நாளை என் விட்டிக்கு வா! நான் இப்போது விடைப் பெறுகிறேன்!

நன்றி
இப்படிக்கு,
முகேஷ், ரூபன்
4G & 4D

நாம் படித்து மகிழ்ந்த கதை


அரைகுறை அறிவு ஆபத்தை உண்டாக்கும்..............

இந்த கதை உன்னக்கு பிடித்திருந்ததா?
- ஆமாம்! இந்த கதையில் நல்ல கருத்து இருக்கிறது.

இந்த கதையில் உன்னை கவர்ந்தவர் யார்? ஏன்?
- இந்த கதையில் என்னை கவர்ந்தவர் சரவணன். அவன் மிகவும் நகைச்சுவையாக நடந்துக் கொண்டான்.

இந்த கதையில் நீ கற்ற மூன்று சொற்கள்:
- துர்த்திஷ்தவசமாக
- பிரமுகர்
- மணமக்களை

சரவணனுக்கு நீ எழுத விரும்பும் தகவல்:
அன்புள்ள சரவணன்,

நீ தன் தவறு செய்து விட்டாய். நீ அம்மாவையும் அப்பாவையும் தான் அல்லவா அவ்வாறு சொல்லியிருக்க முடியும். ஒன்றும் தெரியாத பிள்ளையாகவே இருக்கிறாயே. இனியாவது வாயைக் கொடுத்து மாட்டாமல் இருந்துகொள்! நீ இனிமேல் உன் பொது அறிவை வளர்த்துக் கொள்! இது தான் நான் உனக்கு கூறும் அறிவுரை.

இப்படிக்கு,
ஜென்சீ, ஸ்ரீ துர்கா
4G & 4F
சிங்கம்
இந்தோனேசியா
1798345

அன்புள்ள கொக்கு.நீங்கள் அழகு ராணி போட்டியில் வெற்றி பெற்றீர்கள். எல்லோரும் உங்களுக்கு வாழ்த்து சொல்கிறார்கள். நானும் உங்களுக்கு வாழ்த்து சொல்கிறேன். நீங்கள் அழகு ராணி போட்டியில் வெற்றி பெற்றதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?


நன்றி சிங்கம்

கொக்கு
சென்னை
60020

பர்வேஸ் அலி
21

சிங்கம்

மரப் பொந்து

சென்னை காடு 03456


கொக்கு, நீ எவ்வளவு அழகாக இருக்கிறாய்! ஆயினும் உன் வால் உன் உடம்பின் வண்ணத்தோடு ஒன்றாக இருந்தால் எவ்வளவு அழகாக இருக்கும். உன் வால் தான் கருப்பு நிறத்தில் உள்ளதே!


கொக்கு

மரப் பொந்து

சென்னை காடு 23457


ஐஸ்வரியா

2F

அன்புள்ள கொக்கே


யானை மிருகம்

ஆபிரிக்கா காடு

09834

அன்புள்ள கொக்கே!நீ மிகவும் அழகாக இருக்கிறாய். அழகு ராணி ஆன உன்னை பலரும் மணக்க விரும்புவர். நானும் அப்படித்தான்!


நன்றி


இப்படிக்கு யானை

கொக்கு

மும்பை காடு

02354
ச. கமலி
2J

Sunday, September 14, 2008

அழகு ராணி கொக்கே..........





குட்டி எறும்பு,
USA காடு 2085
08-09-2008
அன்புள்ள கொக்குவுக்கு,
நீ அழகு ராணியானத்தில் எனக்கு மகிழ்ச்சி. நான் உன்னை தொலைக்காட்சியில் பார்த்தேன். எத்தனை அழகி வந்திருந்தாலும் நீ தான் வெற்றி பெறுவாய் என்று நான் அப்போதே அறிந்தேன். அழகு ராணி என்பது ஒரு பெரிய பட்டம். அதனால் நீ உன் அழகை எப்போதும் வைத்திருக்க வேண்டும். இதுவே என் ஆசை. மீண்டும் மீண்டும் வாழ்த்துக்கள் கொக்கு!
இப்படிக்கு,
குட்டி எறும்பு

கொக்கு
மும்பை காடு 007
ஸ்ரீ ஆண்டாள்
2E

Tuesday, September 9, 2008

ஆசிரியர்கள் மிகவும் நல்லவர்கள்!
அவர்கள் எங்களுக்கு படிக்க உதவி செய்பவர்கள்!
ஆசிரியர்கள் அன்பானவர்கள்!
நன்றி அன்புள்ள ஆசிரியர்களே!

தேவா
4G

Monday, September 8, 2008

எனக்கு பிடித்த ஆசிரியர்......

தேன் மிகவும் இனிப்பு,
நம் மொழி மிகவும் முக்கியமானது,
இரண்டும் சேர்ந்தால் தேன்மொழி,
அவர் தான் எனக்கு மிகவும் பிடித்த ஆசிரியர்!

பாடங்கள் சொல்லித் தருவார்,
நம் பிரச்சனைகளைக் கேட்பார்,
திருமதி தேன்மொழி மிகவும் நல்ல ஆசிரியர்,
எனக்கு பிடித்த ஆசிரியர் அவர் தான்!

சினேஹா 4G

Sunday, September 7, 2008

சின்ன முயல் .........................................


சின்ன சின்ன முயலே வா!

என் சிங்கார முயலே வா!

அழகாய் குதித்து ஓடி வா!

அழகாய் காதை ஆட்டி வா!

எனக்குப் பிடித்த முயலே வா!

உனக்குப் பிடித்த காய்கறிகள் தருவேன் வா!

அழகு முயலே ஓடி வா!

என் அருமை முயலே ஓடி வா!


நான்சி பௌலின்

3C

அம்மாவின் அன்பு


இவள் பெயர் சாந்தா. இவளுக்கு மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள். ஒரு நாள் சாந்தாவின் மகன் பலகாரம் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அவளுடைய மகள்கள் இருவரும் அழ ஆரம்பித்தார்கள். சாந்தா அவர்களை சமாதானப் படுத்தினாள். அவர்களுக்கு சாந்தா பலகாரம் செய்ய ஆரம்பித்தாள். பிள்ளைகள் ஒற்றுமையாக பலகாரத்தைச் சாப்பிட்டார்கள்.


சங்கீதா

2E

Sunday, August 31, 2008


இது ஒரு சிங்கம்.
சிங்கம் காட்டு மிருகம்.
சிங்கம் இறைச்சி சாப்பிடும்.
சிங்கம் காட்டுக்கு ராஜா.
சிங்கம் பலமான மிருகம்.
எனக்கு சிங்கம் என்றால் மிகவும் பிடிக்கும்.

பர்வேஸ் அலி

சூழ்நிலை ஒன்று

பிரோஸ் ( 5 F )

அன்று ஓர் இதமான காலை பொழுது. மாலா பள்ளிக்கு ஆவலுடன் நடந்து சென்றாள். அவள் சென்ற வழியில் தேவியை சந்தித்தாள். அவர்கள் பள்ளியை அடைந்ததும், திருட்டு கும்பலில் ஒருவன் அவர்களை நிறுத்தினான். அவன், " நான் யாரென்று உங்களுக்கு தெரியுமா?"என்று பயங்கரமான குரலில் கேட்டான்."இ......இல்லை!"என்றனர்."என் பெயரை கேட்டால் பள்ளியே அதிரும்!சரி!இப்போது நான் உங்களை விடுதலை செய்கிறேன்.ஆனால் பள்ளி முடிந்ததும் என்னை வந்து பார்க்க வேண்டும்!"என்று சொல்லிவிட்டு ஓடி சென்றான்.இதனால், அவர்கள் வகுப்பறைக்கு தாமதமாக சென்றனர்.ஆசிரியர் அவர்களை திட்டினார். மாலாவும் தேவியும் ஆசிரியரிடம் மன்னிப்பு கேட்டனர்.

நிவேதிதா ( 5 F )

காலை பொழுது கதிரவன் நல்ல பொழுதாகும் என நம்பிக்கையோடு கண்களை திறந்தாள், மாலா. அவள் காலை கடன்களை முடித்துவிட்டு,பள்ளிக்கு புறப்பட்டாள்.மாலா பள்ளிக்கு செல்லும் வழியில் தேவியை நகமும் சதையும் போல் இருப்பார்கள்.அவர்கள் பேசிக்கொண்டே சென்றதால் வகுப்புக்கு தாமதமாக சென்றார்கள். அதனால் ஆசிரியர் அவர்களை பலமாக கண்டித்தார்.அவர்கள் ஆசிரியரிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு தங்களுடைய இடத்தில் அமர்ந்தார்கள்.

சரவணன் ( 5B )

மத்தியானம் கதிரவன் செம்மை உலகம் முழுவதும் பரவியது. மாலா பள்ளிக்கு நேரம் ஆனதே அறியாமல் தேவியை சந்திக்க விரைந்து ஓடினாள். தேவிக்கு பசி வயிறை கிள்ளியது! எனவே, அவர்கள் பள்ளிக்கு செல்லாமல் புக்கிட் திமா கடை தொகுதிக்கு உணவு உண்ண போனார்கள். பிறகு அவர்கள் மணியை கண்டதும் பதறிப்போனார்கள்! ஆ! மணி ஒன்று முப்பது ஆயிற்று! இருவரும் புயல் வேகத்தில் பள்ளிக்கு கிளம்பினார்கள். பள்ளியை அடைந்ததும் நடுக்கம் அவர்களது கால்களின் வேகத்தை தடுத்தது. ஆசிரியர் வகுப்பில் கணிதப் பாடம் சொல்லிகொடுத்துக்கொண்டிருந்தார். இருவரும் பதுங்கிகொண்டே வகுப்பினுள் நுழைந்தனர். வாயடி வள்ளி அவர்களை பார்த்துவிட்டாள்! ஆசிரியரிடம் நன்றாக அவர்களைப் பற்றி போட்டு வைத்தாள். அப்புறம் என்ன! இருந்தது அவர்களுக்கு அழகிய பூஜை! இருவரும் சர்வ மரியாதையுடன் தலைமையசிரியாரைக் காண சென்றார்கள்.

முத்து 5G

மாலா காலையில் எழுந்து பள்ளிக்கு செல்லக் கிளம்பினாள். பள்ளிக்கு செல்லும் போது அவள் தன் தோழி தேவியை சந்தித்தாள். அவர்கள் இருவரும் இணைப்பிரியாத நண்பர்கள். அவர்கள் நிண்ட நேரம் பேசினார்கள். நேரம் போனதே அவர்களுக்கு தெரியவில்லை. அவர்கள் பள்ளிக்கு ஒன்றாக செல்ல முடிவு எடுத்தனர். அவர்கள் பள்ளிக்கு மிகத் தாமதமாக ஊர் கதை பேசிக்கொண்டு நடந்து சென்றனர். பள்ளியில் ஆசிரியர் அவர்களைத் தாமதமாக வந்ததற்கு வாய்க்கு வந்தப்படி திட்டினார்.

பாரதிதாசனின் இயற்பெயர் கனக சுப்புரத்தினம். இவர் 29-04-1981 இல் பாண்டிச்சேரியில் கனகசபை, இலக்குமி தம்பதியருக்கும் மகனாகப் பிறந்தவர். பாரதியரிடம் கொண்ட ஈடுபாட்டல் தம் பெயரைப் பாரதி தாசன் என வைத்துக் கொண்டார். தமிழ் மக்கள் உலகததோடு இணைந்து வாழும் வகையில் சிறந்த கருத்துகல்ளை எடுத்துரைத்தார். சமுதாய மறுமலர்ச்சியைத் தோற்றுவிக்கும் புரட்சிகரமான கருத்துகளைத் தம் கவிதைகளில் வெளிப்படுத்தியதால் புரட்ச்சிக் கவிஞர் எனப் பாராட்டப்பட்டார். குடும்பவிளைக்கு, இருண்ட வீடு, தமிழியக்கம், பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு முதலிய நூல்களையும் பல தனிப் பாடல்களையும் எழுதியுள்ளார். இவர் 21-04-1964 அன்று இயற்கை எய்தினார்.


நான்சி பௌலின்

3C

Thursday, August 28, 2008


நானும் கவிஞன் ஆவேன்!

எங்கள் ஆசிரியை எங்களுக்கு ஒரு ஒப்படைப்பைக் கொடுத்தார். அதை நாங்கள் விருப்பத்துடன் செய்தோம். காரணம், அந்த ஒப்படைப்பின் முலம் நாங்கள் தப்லேட் பிசி (tablet pc) என்று அழைக்கப்படும் மடி கணினியைப் பயன்படுத்தினோம்.

அந்த ஒப்படைப்பு ஒரு இணைய இலக்கு வடிவில் அமைந்திருந்தது. நாங்கள் முதலில் கவிதை என்றால் என்ன என்பதை அறிந்தோம். கவிதை பல ஆண்டுகளுக்கு முன் தோன்றியது. நம் இந்திய புராணங்களான மஹாபாரதமும் இராமாயணமும் கவிதை வடிவில் தான் தோன்றின. நாளடைவில் அவை மக்கள் புரிந்துக்கொள்ளும் வகையில் கதைகளாக எழுதப்பட்டன. நாங்கள் இவ்வொப்படைப்பில் கவிதை எழுதுவதோடு ஆர்ட் ரேஜ் ( Art Rage )என்ற மென்பொருளைப் பயன்படுத்தி எங்கள் கவிதைகளுக்கு ஏற்ப படங்கள் வரைந்தோம். அதை நாங்கள் ஒரு பெட்டியில் ஒட்டி, விசித்திரப் பெட்டி ஒன்றை உருவாக்கினோம்.
இதோ நான் எழுதிய ஒரு கவிதையும் அதற்கேற்ப நான் வரைந்த ஓவியமும்.

கடலே கடலே
ஆழமான கடலே
மீன்கள் வாழும் கடலே
பெரிய பெரிய கடலே
நீல நிறக் கடலே
எல்லோரும் விரும்புகிறக் கடலே
அழகிய கடலே
ஷேரன் பெலிண்டா பெகரன்
வெஸ்ட் வியூ தொடக்கப் பள்ளி
மூன்றாம் வகுப்பு
பூங்கா

பூங்கா பூங்கா
அழகியப் பூங்கா
மலர்கள் எ
ல்லாம் பூக்கின்றப் பூங்கா
குயில்கள் கூவும் அழகியப் பூங்கா
செடிகள் மரங்கள்
நிறைந்த பூங்கா
வண்ணத்துப் பூச்சிகள் பறக்கும் பூங்கா
சிறியவர்களும் பெரியவர்களும் விரும்பும் பூங்கா

ஹேமா
3H
வெஸ்ட் வியூ
தொடக்கப் பள்ளி

Wednesday, August 27, 2008

நல்ல நண்பர்கள்



ராமன், ஜீவன், ஆசான் நல்ல நண்பர்கள். அவர்கள் மலேசியாவிற்குச் செல்ல நினைத்தனர். அவர்கள் மலேசியாவிற்கு மீன் பிடிக்க சென்றார்கள். அவர்கள் படகு மேல் உட்கார்ந்து ஆற்றில் தூண்டில் போட்டனர். ஒரு பெரிய மீன் சிக்கியது. அவர்கள் மகிழ்ந்தனர். அவர்கள் தங்களது தங்கும் விடுதிக்குத் திரும்பினர். அங்கு தன் குடும்பத்தோடு பெரிய மீனை சுட்டு சாப்பிட்டனர்.

மாதேஷ் குமார்
2G
வெஸ்ட் வியூ தொடக்கப் பள்ளி

தந்திரம்





ஒரு காட்டில் பல மிருகங்கள் வசித்து வந்தன. அங்கே, ஒரு சிறிய எருது வேலை பார்க்கப் போனது. அங்கே ஒரு கங்காரு இருந்தது. அது கஷ்டப்பட்டு வேலை செய்தது. ஒரு நாள் அந்த சிறிய எருதுக்கு ஒரு யோசனை தோன்றியது. அது விரைவில் பணக்காரனாக வேண்டும் என்று ஆசைப்பட்டது. அந்த சிறிய எருது ஒரு எலும்பை விசியது. அது செடிக்குள் விழுந்தது. சிறிய எருது அந்த எலும்பை கங்காருவைவிட்டு எடுக்கச் சொன்னது. சிறிய எருது அந்த சமயம் பார்த்து கங்காருவின் பணத்தை எடுத்து சென்று ஓடியது. சிறிய எருது ஒரு பேருந்தைப் பார்த்தது. அது பேருந்தில் ஏறி மேட்டின் வழியாக வந்தது. அது கடைக்குப் போனது. ஒரு பலூன், பூட்டு, வேட்டி, பென்சில், ஊஞ்சல் வாங்கியது. கங்காரு கோபமாகவும் கவலையாகவும் இருந்தது.

குமரன்
2F
வெஸ்ட் வியூ தொடக்கப் பள்ளி

வண்ணத்துப் பூச்சி

வண்ணத்துப்பூச்சிகள் அழியக்கூடிய நிலையில் இருக்கின்றன. இதற்கு காரணம் மக்கள் எல்லா பொருட்களையும் வியாபார நோக்குடன் பார்க்கிறார்கள். அழகை ரசிப்பதில்லை. அதற்கு தேவையான பாதுகாப்பு, பராமரிப்பு அளிப்பதில்லை. தேவையான உணவைக் கொடுக்க மறுக்கிறார்கள்.
வண்ணத்துப்பூச்சிகளை விளையாட்டு பொருள்களாகவும் தேவையற்ற ஒரு பூச்சியாகவும் நினைக்கிறார்கள். விவசாயிகள் அவற்றை தன் எதிரிகளாக எண்ணுகிறார்கள். அவற்றை அளிக்க சிந்திக்கிறார்கள் தவிர அதன் இனப் பெருக்கத்திற்கு உதவுவதில்லை. அரசாங்கம் கூட தற்போது "பெட்ரோல் ", எண்ணெயின் மதிப்பை உணர்கிறார்கள். ஆனால் கடவுள் படைத்த ஓர் உயிருள்ள அழகிய பொருள் உலகில் விட்டு மறைந்து விடுகிறதே என்று அவர்கள் கவலைப்படுவதில்லை.
நான் வண்ணத்துப்பூச்சிகளைக் காப்பாற்ற நினைக்கிறேன். அதன் அழகிய வதனம், நிறப் பொருத்தம், சுறுசுறுப்பு மக்களின் மனதை அமைதிப்படுத்துகிறது. அவற்றை நான் பாதுகாப்பான இடத்தில் பராமரித்து தேவையான உணவு வகைகளைக் கொடுப்பேன். அதற்கு சரியான வெப்பநிலையைக் கொடுத்து எதிரிகளிடமிருந்து காப்பாற்றி அதன் இனப்பெருக்கத்திற்கு உதவி செய்வேன். அவற்றின் நிலைமையை உலக செய்திகள் அறிவிக்கும் வண்ணம் நான் பாடுப்படுவேன். அழகை அழிப்பது பாவமன்றோ?

ஷேரன்
வெஸ்ட் வியூ தொடக்கப் பள்ளி
3H

Blog Archive