Sunday, August 31, 2008

சூழ்நிலை ஒன்று

பிரோஸ் ( 5 F )

அன்று ஓர் இதமான காலை பொழுது. மாலா பள்ளிக்கு ஆவலுடன் நடந்து சென்றாள். அவள் சென்ற வழியில் தேவியை சந்தித்தாள். அவர்கள் பள்ளியை அடைந்ததும், திருட்டு கும்பலில் ஒருவன் அவர்களை நிறுத்தினான். அவன், " நான் யாரென்று உங்களுக்கு தெரியுமா?"என்று பயங்கரமான குரலில் கேட்டான்."இ......இல்லை!"என்றனர்."என் பெயரை கேட்டால் பள்ளியே அதிரும்!சரி!இப்போது நான் உங்களை விடுதலை செய்கிறேன்.ஆனால் பள்ளி முடிந்ததும் என்னை வந்து பார்க்க வேண்டும்!"என்று சொல்லிவிட்டு ஓடி சென்றான்.இதனால், அவர்கள் வகுப்பறைக்கு தாமதமாக சென்றனர்.ஆசிரியர் அவர்களை திட்டினார். மாலாவும் தேவியும் ஆசிரியரிடம் மன்னிப்பு கேட்டனர்.

நிவேதிதா ( 5 F )

காலை பொழுது கதிரவன் நல்ல பொழுதாகும் என நம்பிக்கையோடு கண்களை திறந்தாள், மாலா. அவள் காலை கடன்களை முடித்துவிட்டு,பள்ளிக்கு புறப்பட்டாள்.மாலா பள்ளிக்கு செல்லும் வழியில் தேவியை நகமும் சதையும் போல் இருப்பார்கள்.அவர்கள் பேசிக்கொண்டே சென்றதால் வகுப்புக்கு தாமதமாக சென்றார்கள். அதனால் ஆசிரியர் அவர்களை பலமாக கண்டித்தார்.அவர்கள் ஆசிரியரிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு தங்களுடைய இடத்தில் அமர்ந்தார்கள்.

சரவணன் ( 5B )

மத்தியானம் கதிரவன் செம்மை உலகம் முழுவதும் பரவியது. மாலா பள்ளிக்கு நேரம் ஆனதே அறியாமல் தேவியை சந்திக்க விரைந்து ஓடினாள். தேவிக்கு பசி வயிறை கிள்ளியது! எனவே, அவர்கள் பள்ளிக்கு செல்லாமல் புக்கிட் திமா கடை தொகுதிக்கு உணவு உண்ண போனார்கள். பிறகு அவர்கள் மணியை கண்டதும் பதறிப்போனார்கள்! ஆ! மணி ஒன்று முப்பது ஆயிற்று! இருவரும் புயல் வேகத்தில் பள்ளிக்கு கிளம்பினார்கள். பள்ளியை அடைந்ததும் நடுக்கம் அவர்களது கால்களின் வேகத்தை தடுத்தது. ஆசிரியர் வகுப்பில் கணிதப் பாடம் சொல்லிகொடுத்துக்கொண்டிருந்தார். இருவரும் பதுங்கிகொண்டே வகுப்பினுள் நுழைந்தனர். வாயடி வள்ளி அவர்களை பார்த்துவிட்டாள்! ஆசிரியரிடம் நன்றாக அவர்களைப் பற்றி போட்டு வைத்தாள். அப்புறம் என்ன! இருந்தது அவர்களுக்கு அழகிய பூஜை! இருவரும் சர்வ மரியாதையுடன் தலைமையசிரியாரைக் காண சென்றார்கள்.

முத்து 5G

மாலா காலையில் எழுந்து பள்ளிக்கு செல்லக் கிளம்பினாள். பள்ளிக்கு செல்லும் போது அவள் தன் தோழி தேவியை சந்தித்தாள். அவர்கள் இருவரும் இணைப்பிரியாத நண்பர்கள். அவர்கள் நிண்ட நேரம் பேசினார்கள். நேரம் போனதே அவர்களுக்கு தெரியவில்லை. அவர்கள் பள்ளிக்கு ஒன்றாக செல்ல முடிவு எடுத்தனர். அவர்கள் பள்ளிக்கு மிகத் தாமதமாக ஊர் கதை பேசிக்கொண்டு நடந்து சென்றனர். பள்ளியில் ஆசிரியர் அவர்களைத் தாமதமாக வந்ததற்கு வாய்க்கு வந்தப்படி திட்டினார்.

No comments: