Monday, April 6, 2009

நண்பர்கள் தினம்


நாம் நண்பர்கள் தினம் கொண்டாடுவது முக்கியம். ஏனென்றால் சில நாட்டில் சண்டைகள் நடந்து கொண்டு இருக்கிறது. அதனால் நாம் நண்பர்கள் தினம் கொண்டாட வேண்டும். நாம் ஒன்றாக செயல்பட்டால் தான் நாடு மற்றும் சமூகம் முன்னேறும்.

தர்ஷ்னாமூர்த்தி
4 Dynamic

நட்பு என்பது


நட்பு என்பது சூரியன் போல
எல்லா நாளும் பூரணமாய் இருக்கும்

நட்பு என்பது கடல் அலைப் போல
என்றும் ஓயாமல் அலைந்து வரும்

நட்பு என்பது அக்னிப் போல
எல்லா மாசுகளையும் அழித்து விடும்

நட்பு என்பது தண்ணீர் போல
எதில் ஊற்றினாலும் ஒரே மட்டமாய் இருக்கும்

நட்பு என்பது நிலம் போல
எல்லாவற்றையும் பொறுமையாய் தாங்கிக் கொள்ளும்

நட்பு என்பது காற்றைப் போல எல்லா இடத்திலும் நிறைந்து இருக்கும்

விக்னேஷ்வரி
P4 Fascinating

Wednesday, April 1, 2009

அனைத்துலக நண்பர்கள் தினம் !!!!

கொண்டாடுவோம் கொண்டாடுவோம்
அனைத்துலக நட்பைக் கொண்டாடுவோம்
சண்டைப் போடாமல் கொண்டாடுவோம்
மகிழ்ச்சியாக கொண்டாடுவோம்
எங்கள் நண்பர்களோடு மகிழ்ச்சியாக கொண்டாடுவோம்
அனைத்துலக நட்பைப் போற்றிடுவோம்
அனைத்துலக நட்பைப் போற்றிடுவோம்

ஹேமரூபா
4H