நேற்று நானும் என் நண்பர்களும் வகுப்பில் ஒரு விளையாட்டு விளையாடினோம். எனக்கு அந்த விளையாட்டு மிகவும் பிடித்திருந்தது. அது வேடிக்கையாக இருந்தது. எனக்கு இந்த விளையாட்டை மீண்டும் விளையாட வேண்டும் என்று ஆவலாக உள்ளது. பள்ளி இடை வேளையின்போது நான் என் சீன நண்பர்களுடன் விளையாடினேன்.
ஹரிணி 3E
நேற்று நான் என் தமிழ் ஆசிரியருடன் ஒரு வகையான ஜப்பானிய விளையாட்டு விளையாடினேன். அது மிகவும் சுவாரசியமாக இருந்தது. நானும் என் நண்பர்களும் வட்டமாக நின்று கொண்டோம். அதன் பிறகு ஒரு மாணவன் ஹையா! என்று ஒரு ஜப்பானிய வீரனைப்போல் கத்தினான். அவனுக்கு எதிரில் இருந்த இன்னொரு மாணவன் ஹையோ! என்று கையை உயர்த்தி கத்துவான். அவனுக்கு பக்கத்தில் இருக்கும் இரண்டு மாணவர்களும் தங்களின் கையை வைத்து தாக்குவதைப்போல் பாசாங்கு செய்ய வேண்டும். ஆனால் அதை அவர்கள் சீக்கிரமாக செய்ய வேண்டும். தமிழ் வகுப்பில் விளையாடிய விளையாட்டை நான் என் ஆங்கில வகுப்பிலும் விளையாடினேன். என் சீன நண்பர்களும் மலாய் நண்பர்களும் இந்த விளையாட்டை விளையாடினார்கள். எனக்கும் அவர்களுக்கும் மகிழ்ச்சியாக இருந்தது.
மாதேஷ் (3H)
இந்த விளையாட்டு எனக்கு மிகவும் பிடிக்கும். இப்போது இந்த விளையாட்டை எப்படி விளையாடுவது என்று எனக்குத் தெரியும். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. என் நண்பர்களும் இந்த விளையாட்டை விளையாடினார்கள்.
ஆயிஷா ஜெபிரின் (3F)
இந்த 'சமுராய்' விளையாட்டு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.என் ஆசிரியர் இந்த விளையாட்டை விளையாடிக் காட்டினார்.
ஹரிணி (3B)
நான் விளையாடிய விளையாட்டின் பெயர் 'சமுராய்'. இது ஒரு ஜப்பானிய விளையாட்டு என்று நான் நினைக்கிறேன். நானும் என் நண்பர்களும் மகிழ்ந்தோம்.
என் ஆசிரியர் என்னை தாக்கினார். நான் கத்தினேன். என் நண்பன் இரண்டு கைகளை
தூக்குவதற்குப் பதிலாக ஒரு கையை தூக்கினான். எல்லோரும் சிரித்தார்கள். இது
நட்பை வளர்க்கும் ஒரு நல்ல விளையாட்டு.
சரண் (3G)
எனக்கு இந்த விளையாட்டு மிகவும் பிடித்திருக்கிறது. எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. என் தோழர்களும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.இது நட்பை வளர்க்கும் ஒரு விளையாட்டு. மற்றவர்களை எப்படி சீக்கிரமாக சுட்டிக்காட்டுவது என்பதை இந்த விளையாட்டிலிருந்து கற்றுக்கொண்டேன்.
சங்கீதா(3B)
எனக்கு இந்த ஜப்பான் விளையாட்டு மிகவும் பிடித்துள்ளது. இதுவரை நான் இம்மாதிரியான விளையாட்டை விளையாடியதே இல்லை. இந்த விளையாட்டு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. நான் இன்று ஒரு புது விளையாட்டை கற்றுக்கொண்டேன்.
கமலி(3D)
எனக்கு இந்த சமுராய் விளையாட்டு மிகவும் பிடிக்கும்.இந்த விளையாட்டுக்கு கவனம் தேவை. நான் சங்கீதாவை தாக்கினேன். நான் மகிழ்ச்சி அடைந்தேன். நீங்களும் இந்த விளையாட்டை விளையாடலாமே!
த்ரிதாஷா ( 3H)
இன்று அனைத்துலக நண்பர்கள் தினம். நானும் எங்கள் ஆசிரியையும் இந்த விளையாட்டை தமிழ் வகுப்பில் விளையாடினோம். இந்த விளையாட்டு வேடிக்கையாக இருந்தது. என் வகுப்புத் தோழி ஆண்டாள் மிகச் சிறப்பாக விளையாடினாள்.
ஐஸ்வர்யா( 3C)
இந்த விளையாட்டு மிகவும் வேடிக்கையாக இருந்தது. என் நண்பர்களும் நானும் பல பிழைகள் செய்தோம். ஆனால் யாரும் கோபப்படவில்லை. எல்லோரும் சிரித்தோம். இந்த விளையாட்டின் உண்மையான பெயர் எனக்குத் தெரியாவிட்டாலும் இந்த விளையாட்டு விளையாடுவதற்கு வேடிக்கையாக இருந்தது.
ஸ்ரீ ஆண்டாள்( 3G)
Wednesday, May 20, 2009
Monday, May 18, 2009
ஜப்பான்


ஜப்பான் ஆசியக் கண்டத்தில் உள்ள பல தீவுகளைக் கொண்ட ஒரு அழகிய நாடு. இது பசிபிக் பெருங்கடலின் மேற்கு பகுதியில் உள்ளது. இது சூரியன் உதிக்கும் நாடு என்றும் அழைக்கப்படுகிறது. இதன் தலைநகரம் டோக்கியோ.
ஜப்பான் மொத்தம் 6800 தீவுகளை உள்ளடிக்கியது. ஹொக்கைடோ, ஹோன்ஷகு, கியுஷுகு ஆகியன ஜப்பானின் முக்கியமான தீவுகளாகும்.
விடுமுறை போது நான் அங்கு செல்ல பெரிதும் விரும்புகிறேன்.
ஜெயலக்ஷ்மி
4F
நண்பர்கள் தினம்
நாம் நண்பர்கள் தினம் கொண்டாடுவது மிகவும் முக்கியம். உலகின் பல நாடுகளில் சண்டை, போர், போன்ற கொடிய செயல்கள் நடந்துக்கொண்டு வருகின்றன. சிறிய நாடான சிங்கப்பூரில் அனைத்துலக நண்பர்கள் வேலை செய்கிறார்கள். நமது நாட்டிலும் இத்தகைய சண்டைகள் வரலாம். அதை நாம் தவிர்க்க வேண்டும். ஒன்றுப்பட்ட சமுதையமாக வாழ வேண்டும்.
டர்ஷ்னாமூர்த்தி
4E
டர்ஷ்னாமூர்த்தி
4E
அனைத்துலக நட்பு நாள்

நட்பு என்பது சூரியனைப் போன்றது எல்லா நாளும் பூரணமாய் இருக்கும்
நட்பு என்பது கடல் அலை போன்றது என்றும் ஓடாமல் அலைந்து வரும்
நட்பு என்பது அக்னி போன்றது
நட்பு என்பது கடல் அலை போன்றது என்றும் ஓடாமல் அலைந்து வரும்
நட்பு என்பது அக்னி போன்றது
எல்லா மாசுகளையும் அழித்துவிடும்
நட்பு என்பது தண்ணீர் போன்றது
எதில் ஊற்றினாலும் ஒரே மட்டமாய் இருக்கும்
நட்பு என்பது நிலம் போன்றது
எல்லாவற்றையும் பொறுமையாய் தாங்கிக்கொள்ளும்
நட்பு என்பது காற்றைப் போன்றது
எல்லா இடத்திலும் நிறைந்து இருக்கும்
விக்னேஷ்வரி
4F
Subscribe to:
Posts (Atom)
